அமெரிக்கா தூதரகம் அருகில் ஏவுகணை தாக்குதல்- ஈரானில் பதற்றம்

Report

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்தபசுமை மண்டல பகுதியில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. இதன் அருகே இன்று3 ஏவுகணைகள் திடீரென வந்து விழுந்து வெடித்தன.

ஏவுகணைதாக்குதலை அடுத்து பொலிசார் அந்தபகுதியில் மிகுதியாக குவிக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் வாகனங்களும் விரைந்தன.

இதில் அமெரிக்கா தெரிவித்துள்ள குற்றச்சாட்டு என்னவெனில்,

இந்ததாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவ படைகுழுக்கள் நடத்தியிருப்பதாகவும் மேலும் சமீப காலங்களில் பசுமைமண்டல பகுதியில் இதுபோன்ற தாக்குதல்களை இந்த குழுவினர் நடத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

எனினும்,இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பதுடன், இந்த தாக்குதலால் நிகழ்ந்த பாதிப்பு குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மூளும் சூழ்நிலை எழுந்துள்ள நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்கள் நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திஉள்ளது.

3290 total views