அமெரிக்காவில் களவாடிவிட்டு ஓடிய திருடனை கண்ணிமைக்கும் நொடியில் மாட்டிவிட்ட இளைஞன்

Report

அமெரிக்காவில் கடையில் திருடிக்கொண்டு ஓடும் மூகமுடி திருடனை இளைஞர் ஒருவர் டிராலி (Trolley ) தள்ளுவண்டியை மோதச் செய்து போலீஸாரிடம் பிடித்து கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜார்ஜியா மாகாணம் பீச்ட்ரீ (Beachtree )நகரில் கடையில் திருடிவிட்டு முகமூடி நபர் ஓடிக் கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் டிராலி வண்டியை பொருள்களுடன் தள்ளிக் கொண்டு சென்ற இளைஞர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அதை திருடனை நோக்கி தள்ளி மோதச் செய்தார்.

இதில் நிலைதடுமாறி திருடன் கீழே விழுந்ததும் துரத்தி வந்த போலீஸார் அவனை கைது செய்துள்ளனர்.

5120 total views