டயமண்ட் பிரின்சஸிலிருந்து 300 க்கும் மேற்பட்டோரை வெளியேற்றிய அமெரிக்கா!

Report

தனிமைப்படுத்தப்பட்ட டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்து அமெரிக்கர்கள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களை தனது சிறப்பு விமானங்களினூடாக அமெரிக்கா தனது நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளது.

அதன்படி டோக்கியோவில் தரையிறங்கிய இரண்டு சிறப்பு அமெரிக்க விமானங்களின் மூலமாக அவர்கள் அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.

குறித்த நபர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றதும் டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள இராணுவ தளங்களில் அவர்களை தனிமைப்படுத்தி வைத்திய கண்காணிப்பில் வைக்கவும், விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை ஜப்பானின் யோகோகாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரின்சஸ் டயமண்ட் கப்பலில் மொத்தமாக 3700 பேர் சிக்கியிருந்தனர்.

இந்நிலையில் அவர்களில் 356 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நேற்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1765 total views