மீண்டும் ஒருமுறை ட்ரம்பிற்கு நன்றி கடன் பட்ட புட்டின்.....எதற்காக தெரியுமா?

Report

2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் செயின்ட் பீட்டர்ஸ் பேர்க்கில் இடம்பெறவிருந்த பயங்கரத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை தகவலை பகிர்ந்தமைக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பிற்கு மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ரஷ்யாவின் செயிட் பீட்டர்ஸ்பேர்க்கில் சன நெரிசலான இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த இருவரை 2019 டிசம்பரில் ரஷ்யாவின் சிறப்பு படையினர் கைது செய்தனர்.

குறித்த பகுதியில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெறவுள்ளதாக அமெரிக்காவின் உளவுத் துறையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாகவே இந்த தாக்குதல் தடுக்கப்பட்டதுடன்,மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டதாக ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இந்நிலையிலேயே அமெரிக்காவின் மேற்படி உதவிக்கு மீண்டும் நன்றி தெரிவிப்பதாக புட்டின் தெரிவித்துள்ளது.

1250 total views