பாகுபலி மார்ஃபிங் காணொளியை பதிவிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்..

Report

பாகுபலிபடத்தில் வரும் காட்சியில் தனது முகத்தை மார்பிங்செய்து பதிவிடப்பட்ட காணொளியை அமெரிக்கஅதிபர் டொனால்டு டிரம்ப். ரிட்வீட் செய்துள்ளார்.

டிரம்ப்.இந்தியா வருவதை ஒட்டி, சோல் மீம்ஸ் எனும்ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. அதில் பாகுபலி படத்தில் வரும் காட்சியில், பிரபாசின் முகத்திற்கு பதிலாக ட்ரம்பின் முகம் மார்பிங் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவரது மனைவி மெலானியா, மகள் இவாங்கா போன்றோரின்முகங்களும் ஆங்காங்கே மார்பிங் செய்யப்பட்டு பதிவிடப்பட்டிருந்தது.

இந்தகாணொளி வைரலானநிலையில், ட்ரம்பின் கவனத்துக்கும் சென்றுள்ளது. அதனை ரீட்வீட் செய்துதனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ட்ரம்ப், இந்தியாவில் தனது சிறந்த நண்பர்களுடன்நேரம் செலவிடுவதை எதிர்நோக்கி காத்திருப்பதாக பதிவிட்டுள்ளார்.

8354 total views