தலிபான்களுடனான அமைதி பேச்சு வார்த்தையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயர்?

Report

தலிபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையில் தனது பெயரை சேர்க்க இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் வெளியே பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசும்போது, “நான் இந்த வாரம் ஆப்கானிஸ்தானில் நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பதை பொறுந்திருந்து பார்க்க இருக்கிறேன். மிகப் பெரிய வன்முறைகள் ஏதும் பெரிய அளவில் நடக்காமல் இருந்தால் தலிபான்களுடனான பேச்சுவார்த்தைக்கான ஒப்பந்தத்தில்

தனது பெயரை சேர்க்க தயார்” என்று தெரிவித்துள்ளார்.

நாங்கள் அமெரிக்காவின் நீண்ட போரை முடிவுக்குக் கொண்டு வரச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் விரைவில் அமெரிக்க திரும்ப உள்ளனர் என்று ட்ரம்ப் இம்மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் கைதிகள் இடமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் தலிபான்களால் 2016 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட இரண்டு அமெரிக்கப் பேராசிரியர்கள், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முயற்சியால் விடுவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி ஆகியோரைத் தொடர்பு கொண்டு ட்ரம்ப் நன்றி தெரிவித்தார். தலிபான்களுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சு வார்த்தையைத் தொடங்கியுள்ளது.

1174 total views