அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட இந்தியா வாலிபர்.!

Report

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தவர் மணிந்தர் சிங் ஷாஹி (வயது31).

இந்தியரான இவர் அரியானா மாநிலம் கர்னல் பகுதியை சேர்ந்தவர் ஆவார். திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான இவர், 6 மாதங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்றார்.

இந்த நிலையில் மணிந்தர் சிங் ஷாஹி பணியில் இருந்தபோது, அவர் வேலை பார்க்கும் வணிக வளாகத்துக்குள் முகமூடி கொள்ளையர்கள் புகுந்தனர். அவர்கள் மணிந்தர் ஷாஹியை துப்பாக்கியால் சுட்டு தள்ளிவிட்டு, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதில் மணிந்தர் சிங் ஷாஹி ரத்தவெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்

659 total views