புதிய கொரோனா மையமாகும் அமெரிக்கா! 942 பேர் பலி

Report
104Shares

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் 942 பேர் உயிரிழந்துள்ளதுடன் 65,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அதிகமான மக்கள் பரிசோதிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து வேகமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை, அமெரிக்காவின் வோஷிங்டன் மற்றும் நியூயோர்க் பகுதிகள் வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வோஷிங்டனில் குறைந்தது 101 பேரும், நியூயோர்க்கில் 199 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, பல மாநிலங்கள் அவசரகால நிலைகளை அறிவித்து பாடசாலைகள் மற்றும் வணிகங்களை மூட உத்தரவிட்டதுடன் சமூக விலகலையும் சுய தனிமைப்படுத்தலையும் கடைப்பிடிக்க மாநிலங்கள் மக்களை ஊக்குவித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளார்.

எனினும் ஆரம்பத்தில் வைரஸைக் குறைத்து மதிப்பிட்டதனால் , விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

3824 total views