தெருவில் கிடந்த சடலங்கள் -மன்னிப்புக் கோரிய துணை ஜனாதிபதி

Report

தென் அமெரிக்க நாடான ஈக்வடோரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குயாகுவிலின் தெருக்களில் போடப்பட்ட சம்பவம் தொடர்பாக துணை ஜனாதிபதி ஓட்டோ சோனென்ஹோல்ஸ்னர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

ஈக்வடோரில் இந்த வார தொடக்கத்தில் அதிகாரிகள் வீதிகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் குறைந்தது 150 சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.

எனினும் அவர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தார்களா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

ஈக்வடோரில் உயிரிழந்த சுமார் 150 இற்கும் மேற்பட்டவர்களின் உடல் வீதியில் போடப்பட்டியிருந்தமை சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த துணை ஜனாதிபதி “ஒருபோதும் எங்கும் நடக்காத படங்களை நாங்கள் பார்த்துள்ளோம், உங்கள் ஊழியராக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறினார்.

தென் அமெரிக்க நாடான ஈக்வடோரில் 3,500 பேர் கோவிட் -19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் 172 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

7995 total views