அமெரிக்க போர்க் கப்பலில் 286 பேருக்கு கொரோனா

Report

குவாம் தீவில் நிறுத்தப்பட்டுள்ள 'தியோடர் ரூஸ்வெல்ட்' (Theodore Roosevelt) என்ற அமெரிக்க போர்க் கப்பலில் 286 கடற்படை வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த கப்பலில் இருந்த 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தற்போது கொரோனா தொற்று தொடர்பான சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து கப்பலிலிருந்து 2,329 கடற்படையினர் கரைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கொண்டுசெல்லப்படவர்களில் வர்களில் 1700 பேர் ஹோட்டல்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2072 total views