கொரோனாவை மளிகை கடைகளில் பரப்புவதற்கு ஒருவருக்கு பணம் கொடுத்துள்ளேன்! அதிரவைத்த நபரின் செயல்

Report

அமெரிக்காவில் கொரோனா வைரஸை மளிகை கடைகளில் பரப்புவதற்கு ஒருவருக்கு பணம் கொடுத்துள்ளேன் என பேஸ்புக்கில் பதிவிட்டு அதிர்ச்சியை கிளப்பிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

டெக்ஸாஸை சேர்ந்த Christopher Charles (39) என்பவரே இவ்வாறான விபரீத பதிவை வெளியிட்டார்.

அதில், மளிகை கடைகளில் கொரோனா வைரஸை பரப்பும் படி கூறி நபர் ஒருவருக்கு பணம் கொடுத்துள்ளேன் என எழுதியிருந்தார், இந்த பதிவானது வைரலாக பரவியது.

இதையடுத்து பொலிசார் Christopher-ஐ கைது செய்தனர்.

விசாரணையில் மளிகை கடைகளுக்கு கூட்டமாக மக்கள் செல்வதை தடுத்து அவர்களுக்கு கொரோனா பரவாமல் காக்கவே இப்படியான பதிவை வெளியிட்டதாக அவர் பொலிசில் கூறியுள்ளார்.

பொலிசார் கூறுகையில், Christopher-ன் அச்சுறுத்தலில் உண்மையில்லை, யாரும் மளிகை கடைகளில் கொரோனாவை பரப்பவில்லை என கூறியுள்ளனர்.

இதனிடையில் வதந்தியை பரப்பிய Christopher-க்கு இந்த வழக்கில் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

9674 total views