அமெரிக்காவில் கூடியிருந்த மக்கள்மீது துப்பாக்கிச்சூடு! 9 பேர்..27 பேர் காயம்

Report

அமெரிக்காவில் சிக்காக்கோவில் இராணுவ வீரர்களின் நினைவு தினத்தில் கூடியிருந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்ததுள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இறுதி திங்கட்கிழமை, இராணுவத்தில் பணியாற்றி உயிரிழந்த வீரர், வீராங்கனைகளை நினைவுகூரும் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அன்றையநாளில் விடுமுறை விடப்படும். அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் வசிக்கும் பொதுமக்கள் இராணுவ அருங்காட்சியகம், நூலகம் போன்றவற்றிற்கு செல்வார்கள்.

இது தவிர்த்து, விடுமுறை நாளை கழிக்க கடற்கரை, ஏரிக்கு மக்கள் செல்வர். மோட்டார் சைக்கிள்களில் நகர்வலம் வருவர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் நினைவுதின விடுமுறையில் கூடி இருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்ததுள்ளனர்.

இதேவேளை கடந்த 2019 ஆம் ஆண்டு இதேபோன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன் 43 பேர் காயமடைந்தனர்.

மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டில் 6 பேர் உயிரிழந்துடன் 69 பேர் காயமடைந்தனர். இதேபோன்று 2015 ஆம் ஆண்டில் பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2810 total views