கொரோனா தொற்றால் பாதித்த தாயாரை மருத்துவமனைக்கு அழைத்து வர சென்ற இராணுவ வீரருக்கு நேர்ந்த சோகம்!

Report

கொரோனா பாதிப்பால், இராணுவ வீரர் கடந்த மே 22ஆம் திகதி உயிரிழந்த நிலையில், அவரது தாயார் தற்போது உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்து விட்டது.

இந்நிலையில், மே 22ஆம் திகதி சைமன் ஜமுடியோ என்ற 34 வயது இராணுவ வீரர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது 74 வயதான தயார் தற்போது உயிரிழந்துள்ளார்.

சைமன் ஜமுடியோக்கு திருமணமாகி 11 மாதத்தில் குழந்தை ஒன்று உள்ளது.

முதன் முதலில், தனது தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சைமன் ஒன்பது நாட்களுக்கு பிறகே நோய்வாய்ப்பட்டுள்ளார். அதன்பின் தாய்க்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இந்நிலையில், அவரது உயிர் பிரிந்துள்ளது.

1602 total views