16 ஆண்டுகளாக தனது பாட்டியின் சடலத்தை வீட்டு freezer-ல் மறைத்த பெண்... அதிர்ச்சியை எற்படுத்திய சம்பவம்!

Report

அமெரிக்காவை சேர்ந்த பெண் 16 ஆண்டுகளாக தனது பாட்டியின் சடலத்தை வீட்டு freezer-ல் மறைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pennsylvania சேர்ந்த Cynthia Carolyn Black என்ற பெண்ணே இந்த மோசமான செயலை செய்துள்ளார்.

1906ல் பிறந்த Cynthiaவின் பாட்டி Glenora Reckord Delahay கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார்.

ஆனால் பாட்டி இறந்ததை மறைத்து அவரின் சடலத்தை freezerல் மறைத்து வைத்து ஏமாற்று வேலையில் ஈடுபட்டிருக்கிறார் அவரின் பேத்தியான Cynthia.

ஏனெனில் மூதாட்டி Glenoraக்கு federal Social Security மூலம் வந்து கொண்டிருந்த பணம் நின்றுவிடும் என்ற பயத்தில் தான் அவர் இறப்பை மறைத்துள்ளார் Cynthia.

இதையடுத்து தொடர்ந்து அதிகளவிலான பணத்தை பெற்று தனது அடமான கடன்களை அடைத்து வந்துள்ளார்.

கடந்த 2011 - 2020 காலக்கட்டத்தில் மட்டும் Cynthiaக்கு இதன் மூலம் $186,000 வருமானம் வந்துள்ளது.

இந்த சூழலில் தான் தகவலின் பேரில் பொலிசார் Cynthiaவின் இடத்துக்கு சென்று அங்கிருந்த freezer திறந்த போது உள்ளே எலும்புக்கூடாக Glenora சடலம் இருந்ததை கண்டு அதிர்ந்தனர்.

இதை தொடர்ந்து Cynthia-ஐ கைது செய்த பொலிசார் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

1902 total views