அமெரிக்காவில் இடம்பெற்ற கொடூர சம்பவம்... ஹொட்டல் ஊழியரை உயிருடன் கொளுத்திய திருடன்!

Report

அமெரிக்காவில் ஹொட்டல் ஒன்றில் கொள்ளையிட முயன்ற நபர், அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து ஊழியர் ஒருவரை உயிருடன் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கொடூர சம்பவத்தை அடுத்து சம்பவயிடத்தில் இருந்து மாயமான நபரை பொலிஸார் தற்போது தேடி வருகின்றனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் ஃபோர்ட் வொர்த்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஹொட்டலில் இருந்த கண்காணிப்பு கெமரா காட்சிகளில் அந்த நபர் ஹொட்டல் கணக்கரிடம் பணம் கோருவதைக் காட்டுகிறது.

அவர் பணத்தை தரவில்லை என்றால் அந்த ஹொட்டல் கணக்கரை உயிருடன் எரிப்பேன் என்று அந்த நபர் அச்சுறுத்துகிறார்.

தொடர்ந்து தாம் எடுத்து வந்த திராவகத்தை அந்த ஹொட்டல் ஊழியர் மீது வீசியதுடன், நெருப்பு வைத்துவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்புகிறார்.

இச்சம்பவத்தில் அந்த ஹொட்டல் ஊழியர் லேசான காயங்களுடன் தப்பியதாகவும், விரைவில் குணமடைந்து திரும்புவார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ஹொட்டல் நிர்வாகம் கூறுகையில், அந்த சந்தேக நபர் ஹொட்டல் விருந்தினர் பட்டியலைப் பார்க்குமாறு முதலில் கோரினார் என தெரிவித்துள்ளனர்.

தற்போது ஹொட்டலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் சிக்கிய காட்சிகளின் அடிப்படையில், அந்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

3097 total views