அமெரிக்காவில் கொரோனாவால் வேலை இழந்த பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்! வெளியான புகைப்படம்

Report

அமெரிக்காவில் கொரோனாவால் வேலையை இழந்த பெண்ணுக்கு லொட்டரியில் பெரியளவில் பரிசு விழுந்துள்ளது.

Oregon-ஐ சேர்ந்தவர் Lorna Hewitt.இவர் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக பணியை இழந்தார்.

இதையடுத்து மளிகை கடை ஒன்றில் குறைந்த வருமானத்தில் பணியில் சேர்ந்தார், ஆனால் வருமானம் போதாததால் தையல் மிஷினில் முகமூடிகளை தயார் செய்து விற்பனை செய்து வந்தார்.

அதில் கிடைத்த பணத்தில் Lorna லொட்டரி சீட்டுகளை வாங்கிய நிலையில் அதற்கு $126,784 பரிசு விழுந்துள்ளது.

இது குறித்து Lorna கூறுகையில், எனக்கு லொட்டரி விளையாடுவது அதிகம் பிடிக்காது, ஆனால் திடீரென தோன்றியதால் விளையாடினேன்.

அதில் பரிசு விழுந்தது மகிழ்ச்சியளிக்கிறது, பரிசு பணத்தில் எனக்கு செலவு செய்து கொள்வதோடு மற்றவர்களுக்கும் உதவுவேன் என அவர் கூறியுள்ளார்.

2552 total views