வன்முறையை தூண்டும் வகையில் ஆதரவாக பேசிய ஜனாதிபதி டிரம்பின் ட்விட்டர் பதிவு! மூக்குடைத்த ட்விட்டர் நிர்வாகம்

Report

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கறுப்பினத்தவரின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்களை இழிவாக பேசியும், வன்முறையை தூண்டும் வகையில் ஆதரவாக பேசிய ஜனாதிபதி டிரம்பின் ட்விட்டர் பதிவை அந்த இணையதளம் நீக்கியுள்ளது.

மினசோட்டா மாகாணத்தின் மினியாபொலிஸ் பகுதியில் மோசடி வழக்கில் சந்தேகத்தின் பேரில் கறுப்பினத்தவர் ஒருவரை கைது செய்வதன் இடையே,

பொலிசார் ஒருவரால் அந்த நபர் கால் முட்டியால் கழுத்தை அழுத்தியே கொல்லப்பட்டார்.

இந்த விவகாரம் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி பட்டதாரி ஒருவரை கறுப்பினத்தவர் என்ற காரணத்தாலையே மோசடி வழக்கில் சிக்க வைக்க பொலிசார் முயன்றது பொதுமக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து மாகாணம் ஸ்தம்பிக்கும் மட்டும் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில பகுதிகளில் வன்முறையும் அரங்கேறியுள்ளது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்,

நீதிக்காக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்களை குண்டர்கள் என வசைபாடியதுடன்,

போராட்டத்தை காரணம் காட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதாக தகவல் வெளியானால் அப்போது துப்பாக்கிச் சூடும் துவங்கப்படும் என மிரட்டியுள்ளார்.

ட்விட்டரில் இந்த விவகாரம் தொடர்பில் நீண்ட ஒரு பதிவை பதிவேற்றியுள்ள ட்ரம்பின் கருத்து, வன்முறையை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக கூறி ட்விட்டர் நிர்வாகம் அவரது பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது.

ஏற்கெனவே ஜனாதிபதி ட்ரம்புக்கும் ட்விட்டர் நிர்வாகத்திற்கும் இடையே மோதல் போக்கு இருந்துவரும் நிலையில், தற்போது இந்த விவகாரமும் சேர்ந்துள்ளதால் கடுமையான நடவடிக்கைகளை ட்விட்டர் நிர்வாகம் எதிர்கொள்ள நேரிடும் என அரசியல் சமூக நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2837 total views