தந்தை பற்றி அறிய DNA பரிசோதனை மேற்கொண்ட இளம்பெண்... 35 ஆண்டுகள் கழித்து தெரிந்த ஆச்சரிய உண்மை!

Report

அமெரிக்காவில் தனக்கு குழந்தையே இல்லை என நினைத்திருந்த நபர் 35 ஆண்டுகளுக்கு பின்னர் தனக்கு பிறந்த மகள் இருக்கிறார் என்பதை DNA பரிசோதனை மூலம் கண்டுபிடித்துள்ளார்.

Indianapolis நகரை சேர்ந்தவர் Butch Patton. இவர் தனக்கு குழந்தையே இல்லை என பல காலமாக நினைத்திருந்தார்.

இந்த நிலையில் 23andMe என்ற உயிரி தொழில்நுட்பவியல் நிறுவனம் மூலம் Butch, DNA பரிசோதனை செய்த போது அவருக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது.

அதன்படி இளம்பெண் ஒருவரின் DNA அவருடன் ஒத்து போனது தெரியவந்தது.

Megan Goins என்ற இளம்பெண் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது தந்தை பற்றி அறிய DNA பரிசோதனை மேற்கொண்டிருந்தார். அவரின் DNA தான் Butch-உடன் ஒத்து போனது.

இதையடுத்து இருவரும் தந்தை, மகள் என உணர்ந்து கொண்டனர்.

இது குறித்து Butch கூறுகையில், DNA பரிசோதனைக்கு பின்னர் எனக்கு மகள் உள்ளாரா? எனக்கு இது பற்றி தெரியவே தெரியாதே என எனக்கு நானே கேள்வி கேட்டு கொண்டேன்.

என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என கூறினார்.

சில மாதங்களுக்கு முன்னர் இது குறித்து Goins -க்கு இமெயில் வந்தது.

இதையடுத்து சமீபத்தில் தந்தையும், மகளும் நேரில் முதல்முறையாக 35 வருடங்கள் பிறகு சந்தித்து கொண்டார்கள்.

Goins கூறுகையில், நான் என் தாய்க்கு ஒரே மகளாக தான் வளர்ந்தேன், தந்தை குறித்து என்னிடம் தாய் அதிகமாக எதுவும் கூறியதில்லை.

எனக்கு தந்தை இருப்பது தெரியவந்தது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது, இதை பெரிய ஆசிர்வாதமாக கருதுகிறேன் என கூறியுள்ளார்.

14178 total views