தங்கையை காப்பாற்ற 6 வயது சிறுவன் செய்த செயல்...90 தையல்போட்ட மருத்துவர்கள்!

Report

அமெரிக்காவில் கடந்த 9-ம் தேதி பிரிட்ஜர் என்ற 6 வயது சிறுவன், தனது தங்கையை ஒரு நாய் தாக்க வருவதைப் பார்த்துள்ளான் .

இதனையடுத்து, உடனடியாக அந்த நாய் முன்னால் நின்று தனது தங்கையை காப்பாற்றியுள்ளான். அப்போது அந்த நாய் பிரிட்ஜரின் முகத்திலும், தலையிலும் கடித்து குதறி உள்ளது. ஆனாலும், பிரிட்ஜர் தனது தங்கையின் கையைப் விடாமல் பிடித்து கொண்டு இருவரும் தப்பி விட்டனர்.

இந்த தாக்குதலில் பிரிட்ஜரின் முகத்தில் படுகாயம் ஏற்பட்ட நிலையில் 90 தையல்போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்ஜரின் அத்தை இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

அதில், எனது மருமகன் ஒரு ஹீரோ. தாக்க வந்த நாயிடமிருந்து தன் தங்கையைக் காப்பாற்றியிருக்கிறான். இதுகுறித்து அவனிடம் கேட்டபோது " அங்கு யாராவது இறந்து போக வேண்டும் என்றால் அது நானாக இருக்கட்டும் என்று நினைத்தேன்" என்று சொன்னான். இந்தத் தாக்குதலில் பிரிட்ஜரின் முகம் உட்பட உடலில் கிட்டத்தட்ட 90 தையல்கள் போடப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

10181 total views