சமூகவலைதளம் ஊடாக 14 வயது சிறுமியிடம் கவர்ந்து பேசி அவரை நேரில் சந்திக்க சென்ற நபர்! பொலிஸார் கொடுத்த அதிர்ச்சி

Report

அமெரிக்காவில் 14 வயது சிறுமி என நினைத்து ஓன்லைன் மூலம் அவரிடம் மோசமாக பேசி, நேரில் சந்திக்க சென்ற இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் ஹாரிஸ் கவுண்டியில் தான் நடந்துள்ளது.

இது குறித்து பொலிஸ் அதிகாரி ஆலன் ரோசன் கூறுகையில்,

Eduardo De La Cruz Gomez என்ற நபர் சமூகவலைதள செயலி மூலம் பல பெண்களிடம் தவறாக பேசி வந்தார்.

இதையடுத்து 14 வயது சிறுமி போல அதிகாரி ஒருவர் அவரிடம் பேசி வந்தார். அப்போது Eduardo சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ளும் நோக்கத்தோடு அவரை சந்திக்க வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, நாங்கள் சொன்ன இடத்துக்கு Eduardo வந்த நிலையில் அவரை கைது செய்தோம் என கூறினார்.

சிறுமியை எதிர்பார்த்து வந்த அவருக்கு இது அதிர்ச்சியை கொடுத்தது. இதையடுத்து வன்கொடுமை குற்றவாளிகள் பதிவேட்டில் Eduardo கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கொரோனா சமயத்திலும் சிறார்களை குறிவைக்கும் இது போன்ற நபர்களை கண்டுபிடித்து தொடர்ந்து சட்டத்துக்கு முன்னர் நிறுத்துவோம்.

அதே போல Thomas David Gonzalez என்பவரும் சிறுமியிடம் பேசுவதாக நினைத்து ஓன்லைனில் எங்கள் அதிகாரியிடம் பேசியிருக்கிறார்.

அவரையும் நைசாக பேசி நேரில் வரவழைத்து கடந்த 4ஆம் திகதி கைது செய்தாக குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி ஆலன், ஏற்கனவே அவர் மீது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக வழக்கு நிலுவையில் உள்ளது.

எனினும் இந்த இரண்டு சம்பவங்களுக்கு இடையில் எந்தவொரு தொடர்பில்லை, இரண்டும் தனித்தனியாக நடந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

4998 total views