பள்ளிக்குள் நுழைந்து அழுதுகொண்டிருக்கும் 8 வயது சிறுவனை கைது செய்த பொலிசார்!

Report

பள்ளிக்குள் நுழைந்து விம்மி விம்மியழும் 8 வயது சிறுவன் ஒருவனை பொலிசார் கைது செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள பள்ளி ஒன்றில், பயிலும் சிறப்புத்தேவைகள் கொண்ட சிறுவன் ஒருவன், பள்ளியில் தனது இருக்கையில் சரியாக அமரவில்லையாம்.

ஆசிரியர் வற்புறுத்தியும் அவன் சரியாக அமராததோடு, வற்புறுத்திய ஆசிரியரிடம், என் தாய் வருவார், வந்து உன் பின் பக்கத்திலேயே அடிப்பார் என்று கூறி, அவன் அந்த ஆசிரியையின் நெஞ்சில் குத்தியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து பள்ளிக்கு பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர்.


பள்ளிக்கு வந்த பொலிசார், பெஞ்ச் ஒன்றில் அமர்ந்திருக்கும் அந்த சிறுவனை கைது செய்யும் காட்சி, கமெராவில் பதிவாகியுள்ளது.

அந்த சிறுவனிடம் பொலிசாரில் ஒருவர், நீ ஜெயிலுக்கு போகிறாய், ஆகவே எழுந்து நின்று உன் கைகளை பின்னால் கட்டு என்கிறார்.

அதன்படி அந்த சிறுவன் எழுந்து திரும்பி நிற்க, அவனது கையில் விலங்கு மாட்டுகிறார் அந்த பொலிசார்.

ஆனால், அந்த சிறுவனின் கைகள் மிகவும் ஒல்லியாக இருப்பதால், விலங்கு அவன் கையில் நிற்காமல் வழுக்கி வந்து விடுகிறது.

அவனை நடக்கச் சொல்லி பின்னால் செல்லும் பொலிசார், அவனிடம், எனக்கு வேறு வழியில்லை, நான் இப்படிச் செய்ய வேண்டியிருக்கிறது, நீ செய்தது சீரியஸான ஒரு விடயம் என்பதை நீ புரிந்துகொள்ளவேண்டும்.

நீ ஒரு தவறு செய்துவிட்டாய், நீ அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும், அதே தவறை நீ மீண்டும் செய்யக்கூடாது என்று கூற, அந்த சிறுவன் விம்மி விம்மி அழுதவாறே, சரி என்று தலையை ஆட்டுகிறான்.

உண்மையில், தவறிழைக்கும் சிறுவர்களை கைது செய்து, பெரியவர்கள் அடைக்கப்படும் சிறையில் கொஞ்ச நேரம் அடைப்பது 'Scared straight' என்று அழைக்கப்படும் ஒரு நடைமுறையாகும்.

சிறை என்றால் எப்படி இருக்கும் என்பதை அவர்களுக்கு காட்டி, இனி குற்றம் செய்யக்கூடாது என்று அவர்களுக்கு உணர்த்துவதற்காக இப்படி செய்யப்படுவதுண்டு.

இந்த சிறுவனைப் பொருத்தவரை, அவன் சிறைக்கு கொண்டு செல்லப்படவில்லை, அவனுக்கு பொலிசார் விலங்கிட முயன்றதோடு, அவன் சிறைக்கு போவதாக கூறியிருக்கிறார்கள்.

ஆனால், கருப்பினத்தவர் ஜார்ஜ் பொலிசாரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இதுபோன்ற வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

13140 total views