சீன பொருட்களுக்கு அமெரிக்கா தடை!

Report

சீனாவில் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தி பொருட்கள் தயாரிக்கப்படுவதாக 5 பொருட்களை அமெரிக்கா தடை செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சீனா – அமெரிக்கா இடையே பொருளாதார ரீதியான முறுகல் தொடர்ந்து வருகின்றது.

இந் நிலையில் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள சிறுபான்மை முஸ்லீம்களை சீனா கொடுமைப்படுத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

அத்துடன் சிறுபான்மையினரையும், குழந்தைகளையும் கட்டாயப்படுத்தி வேலை பார்க்க வைத்து தயாரிக்கப்படும் சீன பொருட்களை அமெரிக்கா தடை செய்வதாக அறிவித்துள்ளது.

அதன்படி சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் தயாரிக்கப்படும் மின்சாதன பொருட்கள், பருத்தி, பழங்கள் உள்ளிட்டவற்றிற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.

3675 total views