காந்திக்காக கொந்தளித்த ட்ரம்ப்.!

Report

அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா மாகாணத்தின் மினியாபொலிஸ் நகரில், ஜார்ஜ் பிலாயட் (வயது 46) என்ற கறுப்பினத்தவர் மே மாதம் காவல் துறையினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையை கண்டித்து அமெரிக்காவில் மாபெரும் போராட்டமே நடந்து வருகிறது.

மேலும், பிளாக் ளைவ்ஸ் மேட்டர் என்ற பெயரில் இனவெறிக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், பல தலைவர்களின் சிலையும் உடைத்து நொறுக்கப்பட்டது.

இந்த வன்முறை போராட்டத்தின் போது வாஷிங்டனில் இருக்கும் இந்திய தூதரகத்தில் இருந்த மகாத்மா காந்தியின் சிலையும் சேதப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மின்னசோட்டா மாகாணத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போராட்டக்காரர்கள் என்ற போர்வையில் ரவுடி கும்பல் காந்தியின் சிலையை கூட விட்டுவைக்காமல் சேதப்படுத்தியது.

ஆபிரகாம் லிங்கன் சிலையை சேதப்படுத்தியபோதே பொறுமைகாக்க கூறி வேண்டினேன். ஆனால், இதன்பின்னர் ஜார்ஜ் வாஷின்டன் மற்றும் தாமஸ் ஜெபர்சன் சிலையும் தாக்கப்பட்டது.

மகாத்மா காந்தி அமைதியை விரும்பியவர். அவரை உங்களுக்கு பிடிக்கவில்லை. என்ன செய்கிறோம் என்பது தெரியாமல், ரவுடி கும்பல் அட்டூழியம் செய்தது என தெரிவித்தார்.

2951 total views