டிரம்பின் மூத்த மகனுக்கு கொரோனா உறுதி

Report

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் (42), கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அறிகுறிகள் எதுவும் இன்றி அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மருத்துவ வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வருவதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், டிரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் ருடி கியுலியானியின் மகன் ஆண்ட்ரூ கியுலியானியும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை ஏற்கனவே, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப், இளைய மகன் பாரன் டிரம்ப் ஆகியோர் தொற்று பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1121 total views