கொல்லப்பட்ட ஊடகவியலாளர் உயிருடன்..

Report

உக்ரைனில் கொல்லப்பட்டு விட்டார் என நம்பப்படும் ரஸ்ய ஊடகவியலாளர் அர்கடி பப்சென்கோ இன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பொன்றில் உயிருடன் தோன்றியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த ஊடகவியலாளரை ரஸ்யா கொலை செய்து விட்டது என குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் அவர் உக்ரைன் தொலைக்காட்சியில் தோன்றியுள்ளார்.

தன்னை கொல்வதற்கான சதி குறித்து ஒரு மாதத்திற்கு முன்னர் தனக்கு தகவல் கிடைத்தது என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது உயிரை காப்பாற்றியதற்காக உக்ரைன் பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொலை நாடகத்திற்கு தாமே காரணம் எனவும் ஊடகவியலாளரை கொலை செய்ய முயல்பவர்களை கைது செய்வதற்காகவே இந்த விடயம் மறைக்கப்பட்டதாகவும் உக்ரைன் அறிவித்துள்ளது.

5673 total views