ட்ரம்பின் முடிவால் பற்றி எரியும் ஜெருசலம்

Report
1175Shares

உலகளாவிய விமர்சனங்களுக்கு நடுவே, டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலின் தலை நகராக ஜெருசலத்தை அறிவித்ததை அடுத்து, ஜெருசலம், ரமெல்லா, மேற்குக் கரை மற்றும் காசா எல்லைப்புறம் ஆகிய பகுதிகளில் வன்முறைகள் வெடித்துள்ளன.

பலஸ்தீன நகரங்களில் பணிப் புறக்கணிப்பிற்கான அழைப்பை பாலஸ்தீன அதிகார சபை விடுத்துள்ளது. இஸ்லாமிய ஹமாஸ் இயக்கம் மற்றுமொரு கிளர்ச்சிக்கான அழைப்பை விடுத்துள்ளது.

இன்று வீதியில் இறங்கியுள்ள பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய இராணுவத்திற்கெதிரான வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வன்முறைகள் அல்லது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளின், வான்பரப்பெங்கும் வீதிகளில் எரியூட்டப்பட்ட ரயர்களில் இருந்து எழும் தீயும் கரும்புகையும் பரவியுள்ளதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

மற்றுமொரு கிளர்ச்சிக்கு பாலஸ்தீனர்கள் தயாராவதன் அறிகுறியாக இது தெரிகிறது. டொனால்ட் ட்ரம்பின் முடிவிற்கெதிராக கிளர்த்திருக்கும் மக்கள், இஸ்ரேலிய இராணுவதினருக்கு எதிராக கற்களை வீசுகிறார்கள். பதிலுக்கு இஸ்ரேலிய காவல்படை கண்ணிர்ப் புகை மற்றும் றப்பர் குண்டுகளை ஆர்ப்பட்டக் கரார்களுக்கு எதிராக பயன்படுத்துகிறது.

மத்திய கிழக்கின் சமாதான முயற்சிகளைக் குழப்பக் கூடியதும், குறித்த பிரதேசத்தில் வன்முறைகளை ஏற்படுத்தக் கூடியதுமான டொனால்ட் ட்ரம்பின் முடிவை சர்வதேசத் தரப்பினர் வன்மையாக கண்டித்துள்ளனர்.

எச்சரிக்கைகளையும் எதிர்ப்புகளையும் எப்போதுமே பொருட்படுத்தாத டொனால்ட் ட்ரம், இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவ் இலிருந்து ஜெருசலத்திற்கு மாற்றவும் முடிவு செய்திருக்கிறார்.

அமெரிக்க அதிபரின் இம் முடிவை வன்மையாக கண்டிக்கும் பாலஸ்தீன ஆர்ப்பாட்டக் காரர்கள் அமெரிக்கக் கொடிகளையும், ட்ரம்பின் உருவப் பொம்மைகளையும் எரியூட்டி தங்கள் எதிர்ப்பை வெளிக் காட்டியுள்ளனர்.

37096 total views