சவுதியில் 85000 ஆண்டுகளுக்கு முன் மனிதன் வாழ்ந்ததற்கான சான்று!

Report
19Shares

சவுதி அரேபியாவில் 85000 ஆண்டுகளுக்கு முன் மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் அல் நிபட் பாலைவனத்தில் அல் வுஸ்டா பகுதியில் 85000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேபியன்ஸின் ஒரு விரல் எழும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் வுஸ்டாவில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதன் பயன்படுத்திய கல் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆபிரிக்காவில் இருந்து வெகுஜன இடம்பெயர்வுகளால் ஹோமோ சோபியர்கள் வெளியேறியுள்ளனர். ஆனால் ஆபிரிக்காவில் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் வாழவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தற்போது இந்த கண்டுபிடிப்பின் மூலம் இது பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது விரல் எழும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஹோமோ சோபியர்கள் பற்றி ஆய்விற்கு முக்கியமானதாக கருதப்பட்டுள்ளது.

1274 total views