அமெரிக்காவின் பொருளாதார தடை அறிவிப்புக்கு ரஷ்யா பதில்

Report
63Shares

மேற்கு நாடுகள் மீண்டும் ஒரு முறை சிரியாவின் மீது தாக்குதல் நடாத்தினால், சர்வதேச நெருக்கடி நிலைமையொன்று ஏற்படும் என ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் புதிய பொருளாதார தடைகளை சுமத்தவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் ரஷ்ய ஜனாதிபதி இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேற்கு நாடுகள் மேற்கொள்ளும் தாக்குதல்களினால் ஐக்கிய நாடுகளின் உறுதி மொழி மீறப்படுகின்றது. அந்த நாடுகள் மீண்டும் மீண்டும் இவ்வாறு தாக்குதல் நடாத்தினால் சர்வதேச உறவுகள் பாரிய நெருக்கடிக்குள்ளாவதாகவும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

2752 total views