வாழைப்பழத்துக்குள் மறைத்து வைக்கப்பட்ட கொக்கைன்

Report
22Shares

ஜேர்மனி பவரியாவின் பல்பொருள் அங்காடிகளில் வாழைப்பழங்களுக்குள் மறைத்து விற்கப்படும் கொக்கைன் வியாபாரம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொக்கைன் ஈக்வடோரிலிருந்து வாழைப்பழங்களுக்குள் மறைத்து வைத்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்டுள்ளது. இந்த விடயம் கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 950 கிலோ எடையுள்ள கொக்கைன் நேற்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாழைப்பழம் பழுக்கவைக்கும் நிலையங்களில் இருந்தே கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஒவ்வொரு கிலோவாக வாழைப்பழப் பொதிகளில் மறைக்கப்பட்டிருந்ததாகவும் பவரியாவின் போதை மருந்து தடுப்புப் பிரிவின் தலைமை அதிகாரி ஜோர்ஜ் பெய்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜேர்மனி முழுவதுமுள்ள வாழைப்பழம் பழுக்கவைக்கும் நிலையங்களில் இருந்து இவை ஐரோப்பாவின் humburg எனும் இடத்திற்கு அனுப்பப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கொக்கைன் கடத்தல் சம்மந்தமாக கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி 12 அல்பேனியர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

1700 total views