ஜோர்ஜியா நாட்டின் பிரதமர் பதவி விலகினார்

Report
8Shares

ஜோர்ஜியா நாட்டின் பிரதமர் ஜோர்ஜி க்விரிகாஷ்விலி தான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக அந்த நாட்டின் தலைநகரில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவர் தனது பதவி விலகளை அறிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 31ம் திகதி முதல் அரசுக்கு எதிரான போராட்டம் நாட்டின் தலைநகரில் இடம்பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த நாட்டில் இரு இளைஞர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொல்லப்பட்டதையடுத்தே அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன.

இந்த சம்பவத்துக்கு அரசாங்கம் பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறி வந்த நிலையில் நேற்று புதன்கிழமை அவர் பதவி விலகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

378 total views