தாய்லாந்து குகை, அடேயப்பா!! எத்தனை கடினம்…? அந்த சிறுவர்களின் மனோதிடத்தைப் பாருங்கள்….

Report
465Shares

இப்படியெல்லாம் கூட மலைக்குகைகள் இருக்கின்றனவே…

ஒரு இடத்தில் வெறும் 15 அங்குலம் தான் குகையின் விட்டம்…!ஆமாம் – இவ்வளவு குறுகலான வழிகளின் வழியாகஅந்த சிறுவர்கள் முதலில் உள்ளே சென்றது எப்படி…?

நீரின் வேகத்தில் அடித்துக் கொண்டு செல்லப்பட்டிருப்பார்கள்என்று தோன்றுகிறது….

அந்த சிறுவர்களின் மனோதிடத்தைப் பாருங்கள்…. மீட்புக் குழுவை (ரெஸ்க்யூ டீமைப் )பார்த்து – ஒருவன் கூட அழவில்லை. தைரியமாக சிரித்துக்கொண்டே கை அசைக்கிறார்கள்…

9 நாட்களுக்கு எதைச்சாப்பிட்டு எப்படி உயிரோடு இருந்தார்கள்…? புரிந்து கொள்வது கடினமாகவே இருக்கிறது. God is Great…! மீட்பு நடவடிக்கைகள் முழுவதுமாக முடிந்த பின்னர் தான்முழு விவரங்களும்தெரிய வருமென்று நினைக்கிறேன்.

நிறைய வெளிநாட்டு செய்திகள் பார்த்தேன்… உலகம் பூராவும் இதில் காட்டும் அக்கறை பிரமிக்க வைக்கிறது…எங்கெங்கிருந்தெல்லாமோ உதவிகள் வருகின்றன…. துண்டு துண்டாக நிறைய வீடியோக்கள் வெளிவந்திருக்கின்றன. நண்பர்கள் பார்த்து, ஓரளவு புரிந்து கொள்ள சின்னச் சின்ன வீடியோக்கள் சில கீழே

14112 total views