66 வருடங்களாக நகங்கள் வெட்டாத விசித்திர மனிதன்

Report
155Shares

உலகின் நீளமான நகங்களை வைத்திருந்த நபராக இடம்பிடித்த ஸ்ரீதர் சில்லால், 66 வருடங்களுக்குப் பின்னர் நகங்களை வெட்டியுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ஸ்ரீதர், 1952 ஆம் ஆண்டு முதல் தனது இடது கை விரல்களில், நகங்களை வெட்டாமல் பாதுகாத்து வந்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு உலகின் நீளமான நகம் கொண்ட நபர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார்.

இதன்பிறகும் நகம் வெட்ட மறுத்த ஸ்ரீதர், 909 புள்ளி ஆறு மீற்றர் அளவிற்கு நகங்களை வளர்த்தார். இந்நிலையில், அவர் தமது நகங்களை அருங்காட்சியகத்திற்கு தானமாக கொடுக்க முடிவு செய்தார்.

அதன்படி அவரது நகங்கள் வெட்டப்பட்டு புனேவில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

5933 total views