அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள கோரிக்கை

Report
132Shares

நேட்டோ அமைப்பை பிரதிநிதித்துவம் செய்கின்ற நாடுகள், அந்த அமைப்புக்கு வழங்குகின்ற நிதி பங்களிப்பினை இரட்டிப்பாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பிரசில்ஸில் இடம்பெற்று வரும் நேட்டோ அமைப்பின் விசேட கூட்டத்தில் வைத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

நேட்டோ அமைப்பை பிரதிநிதித்துப்படுத்தும் நாடுகள் தற்போது, நோட்டோ அமைப்பிற்கு, தமது தேசிய உற்பத்தியில் 4 சதவீத நிதிப்பங்களிப்பை வழங்குகின்றன.

இதன் அடிப்படையில் நேட்டோ அமைப்பை கொண்டு நடத்த அமெரிக்காவுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டே, நேட்டோ அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகள் தமது நிதிபங்களிப்பை 8 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.

5380 total views