ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்: 33 பேர் பலி..60 பேர் படுகாயம்!

Report

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்களில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதிகள் மற்றும் படையினருக்கிடையில் அடிக்கடி துப்பாக்கி சூடு இடம்பெற்று வருகின்றது. இதில் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள முகமந்த் தாரா என்ற மாவட்டத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் அட்டூழியம் செய்வதாகவும், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த போராட்டத்தில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 60 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1091 total views