லிபிய கடல் பகுதியில் படகு கவிழ்ந்து 100 பேர் பலி

Report

லிபிய கடல் பகுதியில் எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100 அகதிகள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லிபிய கடல் பகுதியில் இருந்து சூடான், மாலி, நைஜீரியா, கேமரூன், கானா, லிபியா, அல்ஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளை ஏற்றிக்கொண்டு 2 பிளாஸ்ரிக் படகுகள் ஐரோப்பிய நாடுகளுகளை நோக்கி புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

அந்தப் படகுகளில் ஒன்று எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 100 அகதிகள் வரை பலி ஆகியுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தத லிபிய கடலோரக் காவல் படையினர், உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும், 276 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

1065 total views