முஸ்லிம்கள் பெருமளவில் தடுத்து வைப்பு

Report

தங்களது இறைமைக்கு மதிப்பளிக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினது புதிய ஆணையாளர் மிச்சல் பெச்சலெட்டிடம், சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் சிஞ்ஜியான் பிராந்தியத்தில் உய்குர் முஸ்லிம்கள் பெருமளவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது தொடர்பில் புதிய மனித உரிமைகள் ஆணையாளர் கண்டனம் வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதில் வழங்கியுள்ள சீனாவின் வெளிவிவகார அமைச்சு, சீனாவின் இறைமையை மதிப்பதுடன், நீதியாகவும் தொலைநோக்குடனும் அவர் நடந்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

4967 total views