ஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்

Report

அதிபர் ட்ரம்பை பார்த்து ஐ.நா சபையில் உலக தலைவர்கள் கேலியாக சிரித்த நிகழ்ச்சி அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐ.நா சபையில் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

அதில் பேசிய ட்ரம்ப், தான் அதிபராக வந்த பிறகுதான் அமெரிக்காவே முன்னேற ஆரம்பித்தது என்று சுய புராணத்தை அள்ளி விட்டார்.

நண்பர்களை எதிரிகளாக மாற்றுவது கொடுங்கோலர்களை நல்லவராக சித்தரிப்பது தாறுமாறாக தலைவர்களை விமர்சிப்பது என்று உலகம் முழுவதும் பெயரை கெடுத்துவிட்டு ட்ரம்ப் இப்படி கதை அளந்ததை கேட்டு உலக தலைவர்கள் அடக்க முடியாமல் சிரித்தனர். அதை பார்த்து ட்ரம்ப் ஆடிப்போனார்.

என்றாலும் சமாளித்துக் கொண்டு“ இப்படி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை; பரவாயில்லை” என்று சொல்லி தொடர்ந்தார்.

52169 total views