குண்டான சுற்றூலா பயணிகள் கழுதை மேல் சவாரி செய்ய தடை!

Report

கிரீஸ் நாட்டில் குண்டான சுற்றுலா பயணிகள் கழுதை மேல் சவாரி செய்ய தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

கிரேக்க நாட்டின் தலைநகரில் அமைந்துள்ளது சாண்டோரினி தீவுகளுக்கு, நாள்தோறும் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அவர்களில் ஏராளமானோர் கழுதைகளில் ஏறி சவாரி செய்வதை விரும்புகின்றனர். இதன் காரணமாக, நீண்ட நேரம் சுற்றுலா பயணிகளை சுமந்து செல்லும் கழுதைகளுக்கு அதன் முதுகுப்பகுதி மற்றும் உடலில் காயம் ஏற்படுகிறது.

மேலும்,குண்டானவர்களும் அந்த கழுதையின் மேல் ஏறி பயணம் செய்வதால் உடலில் சில பகுதிகளும் காயம் அடைந்துள்ளது.

இதையடுத்து, அவைகள் அதற்கு தகுந்த உணவும், தண்ணீரும் சரிவர உட்கொள்வதில்லை.

இந்நிலையில், இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்றுள்ள அரசு, கழுதைகளின் நலனுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில்,குண்டான சுற்றூலா பயணிகள் கழுதை மேல் சவாரி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கழுதைகளின் மேல் சுமந்து செல்லும் அளவு 100 கிலோவுக்கு மேல் இருக்க கூடாது எனவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

3587 total views