ஒரே நேரத்தில் உலகை அச்சுறுத்தும் 3 பெரும் புயல்கள்! காலநிலை மாற்றத்திற்கான ஆதாரம்!

Report

வழக்கத்தில் இல்லாத வகையில் இந்தியாவிற்கு மேற்கு பகுதியில் லூபன் புயல் ஓமன் நாட்டையும், கிழக்கு பகுதியில் டிட்லி புயல் ஒரிசா மாநிலத்தையும் தாக்குகின்றன.

மேலும் இதே நேரத்தில் அமெரிக்காவின் புளோரிடா பகுதியை பெரும்புயல் மைக்கேல் தாக்கவுள்ளது.

இந்த தாக்குதல்கள் அனைத்தும் புவி வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பால் நடக்கும் விளைவுகள் ஆகும்.

இந்த வெப்பநிலை உயர்வு 1.5 டிகிரி செல்சியஸ் அளவை தானாகவே சில ஆண்டுகளில் எட்டிப்பிடிக்கும் நிலையில் இதுபோன்ற தாக்குதல்கள் இன்னும் பல மடங்கு அதிகமாகக் கூடும் என தெரிவித்துள்ளனர்.

ஐநா அறிவியலாளர்கள் கூறியுள்ளபடி, இதனை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால், மனித இனத்திற்கு எதிர்காலம் இல்லை. இதனை எடுத்துக்கூறும் இயற்கையின் எச்சரிக்கை என்றே கொள்ள வேண்டும்.

இந்நிலையில் இதற்கு "தீர்வு என்ன?" ஒருபுறம் பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு பயன்பாட்டை போர்க்கால அடிப்படையில் குறைக்க வேண்டும். மறுபுறம் அதிகரிக்கும் இயற்கை சீற்றங்களை சமாளிக்கும் திட்டங்களை அதிவேகத்தில் செயலாக்க வேண்டும்.

இதற்கெல்லாம் ஐநா அறிவியலாளர்கள் அக்டோபர் 8 அன்று ஐநா காலநிலை மாற்ற சிறப்பு அறிக்கை வெளியீட்டின் போது கூறியது போல, 'இந்த சிக்கலை உணர்ந்து நடவடிக்கை எடுக்கும் அரசாங்கங்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்'.

8364 total views