மூன்று பேர் உயிரை பறித்த இந்தோனேசியா நிலநடுக்கம்; பீதியில் மக்கள்!

Report

இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கதால் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பப்புவா நியூ கினியாவில் ரிக்டர் அளவுகோலில் 7-ல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், மக்களை அச்சுறுத்தல் மற்றொரு நிலநடுக்கம் இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் அமைத்துள்ள ஜவா மற்றும் பாலி தீவுகளில் இந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது.இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6ஆக பதிவாகியுள்ளது.

திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

எனினும் நிலநடுக்கத்தால்பெரும் அளவிலான பொருட் சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனவே சுனாமி எச்சரிக்கை ஏதும் அப்பகுதிக்கு விடுக்கப்படவில்லை.

முன்னதாக இந்தோனேசியாவின் சுலவேசி தீவை சமீபத்தில் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகிய நிலநடுக்கம் தாக்கியது. அந்த பயங்கர நிலநடுக்கத்தால்,2000- க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், பல கோடி மதிப்பிலான பொருட்களும் சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

1108 total views