ரஃபேல் ஒப்பந்தத்தில் பங்குதாரராக ரிலையன்ஸ் வேண்டும்: பிரான்ஸ் பத்திரிக்கை தகவல்!

Report

ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக இணைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தியதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செய்தி பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியா பார்ட் பத்திர்க்கை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

டசால்ட் நிறுவனத்தின் இந்திய பங்கு தாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இடம்பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டசால்ட் நிறுவனதிடம் உள்ள ஆவணங்களில் இந்த தகவல்கள் உள்ளதாக மீடியா பார்ட் தெரிவித்துள்ளது.

ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசு ரிலையன்ஸ் நிறுவனத்தை மட்டுமே பரிந்துரை செய்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் தெரிவித்திருந்தார். இந்த தகவலை அப்போத மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து வந்தது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து விளக்க அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 நாள் சுற்றுபயணமாக பிரானஸ் சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கு ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சருடன் விவாதிக்க உள்ளார்.

ரபேல் முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே சரமாரியாகக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் நிலையில் பிரான்ஸ் புலனாய்வு இதழின் இந்த தகவல் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

829 total views