ரஷ்ய ராக்கெட் நடுவானில் கோளாறு; உயிர் தப்பிய வீரர்கள்

Report

விண்ணில் செலுத்தப்படட ரஷ்ய ராக்கெட் நடுவானில் கோளாறானதை தொடர்ந்து அதிலிருந்த விண்வெளி வீரர்கள் அவசரமாக தரையிறங்கி உயிர் தப்பினர்.

ரஷ்ய ராக்கெட்டான 'சோயுஸ்',நிக், ரோஸ்கோஸ்மோஸ் என்ற இரண்டு விண்வெளி வீரர்களுடன் கஜகஸ்தானிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் நடுவானில் ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராக்கெட்டிலிருந்த பேலிஸ்டிக் வாகனம் மூலம் வீரர்கள் இருவரும் அவசரமாக தரை இறங்கி உயிர் தப்பினர்.

ஏவப்பட்ட இடத்திலிருந்து 450 கி.மீ தொலைவில் வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், இருவரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டின் பூஸ்டரில் கோளாறு ஏற்பட்டதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

1087 total views