பாதுகாப்பு படையினரால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 10 பேர் பலி!

Report

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவை போன்றே ஆப்கானிஸ்தான் போரால் சீரழிந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 16 வருடங்களாக தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அப்பாவி பொது மக்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

இதை எதிர்கொள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையே நடைபெறும் உள்நாட்டுப்போரை பயன்படுத்தி, பல இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால்பதித்து பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நங்கர்ஹார் மாகாணத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைகளுக்கு உளவுத்தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தேசிய பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் அங்கு சென்று அதிரடியாக நடவடிக்கையில் இறங்கியது. இந்த தாக்குதலின் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனினும், இந்த தாக்குதலின்போது படையினருக்கோ, பொது மக்களுக்கோ எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை.

1025 total views