சிறுமிகளை 900 முறை கற்பழித்த காம கொடூரனுக்கு 22 ஆண்டு சிறை!

Report

ரஷ்யாவில்13 வயதிற்குட்பட்ட சிறுமிகளை 900-க்கும் அதிகமான முறை கற்பழித்த காம கொடூரனுக்கு நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

விக்டர் லிஷாவ்ஸ்கி (37) - ஓல்கா என்ற ரஷ்யா தம்பதியினர் ஒன்பதுக்கும் அதிகமான சிறுவர் சிறுமிகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், விக்டர் லிஷாவ்ஸ்கி என்பவன் தான் வளர்த்த 12 முதல் 17 வயது சிறுமிகளை மிரட்டுதலின் பேரில் ஐந்து ஆண்டுகளாக 900 முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் அவரின் காம வெறி அதிகரிக்கவே, பொறுத்து கொள்ளாத சிறுமிகள் ஓல்காவிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அதிர்ச்சியடைந்த ஓல்கா, விக்டர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து,குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் விக்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் விக்டரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றம் அவனுக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

17995 total views