விமானத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! கண்ணீர் விட்ட பயணிகள்..

Report

விமானத்தில் பயணித்த முன்னாள் ஆசிரியருக்கு விமானி ஒருவர் இதயத்தை உருக்கும் வகையில் நன்றி சொல்லிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

துருக்கியில் இடம்பெற்ற குறித்த நெகிழ்ச்சி சம்பவத்தில், ஏர்லைன்ஸ் விமானி மித்தாட் ஓகன் ஒனான் என்பவர் விமானத்தை ஓட்ட எத்தனிக்கிறார்.

அப்போது, எதிர்பாரத விதமாக விமானத்தில் தனது ஆசிரியர் பயணிப்பதைக் கவனிக்கிறார். உடனே மைக்ரோஃபோன் மூலம் தனது ஆசிரியருக்கு நன்றி சொல்கிறார்.

அதில், உணர்வுப்பூர்வமாக மித்தாட் பேசும் வார்த்தைகள் அனைத்தும் கேட்கும் ஆசிரியரின் கண்கள் கண்ணீர் பெருக்கில் குளமாகின்றன.

இதையடுத்து, ஆசிரியரை நோக்கி வரும் விமானக் குழுவினர், ஆசிரியருக்கு பொக்கே அளித்து அவரின் கைகளில் முத்தமிடுகின்றனர்.

இறுதியாக விமானியும் ஆசிரியரிடம் வந்து ஆசி பெறுகிறார். இதயத்தை உருக்கும் இந்த சம்பவத்தைப் பார்த்த ஏராளமான சக பயணிகள், கண்ணீர் விட்டு நெகிழ்ந்தனர்.

11461 total views