இறந்தவரின் கர்ப்பப்-பை மூலம் குழந்தை பெற்ற உலகின் முதல் பெண்!

Report

உலகில் முதன் முறையாக பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு இறந்தவரின் கர்ப்பப்பை மூலம் குழந்தை பிறந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிறவிலேயே கர்ப்பப்பை இல்லை. இதையடுத்து, சாவ் பாவ்லோ பல்கலைக்கழக ஆஸ்பத்திரி டாக்டர் டேனி இஷ்ஜென் பெர்க் தலைமையிலான குழுவினர் இறந்த 45 வயது பெண்ணின் கர்ப்பபை அவருக்கு பொருத்தினர்.

இதில், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில்ஆபரேஷன் நடைபெற்ற குறித்த பெண்ணுக்கு தற்போது அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

முன்னதாக, அமெரிக்கா, செக் குடியரசு, துருக்கி ஆகிய நாடுகளில் இறந்த பெண்களிடம் இருந்து தானம் பெற்று 10 பேருக்கு இது போன்ற ஆபரேசன் நடத்தப்பட்டது.

இருப்பினும், அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. தற்போது இப்பெண்ணுக்கு 2 கிலோ 550 கிராம் எடையுடன் கூடிய குழந்தை வெற்றிகரமாக பிறந்துள்ளது.

மேலும், சர்வதேச அளவில் 500 பேரில் ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை கோளாறினால் இப்பிரச்சினை எழுகிறது. அவர்களுக்கு கர்ப்பபை மாற்று ஆபரேசன் மூலம் குழந்தைபெறும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

5319 total views