இந்தோனேசியாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்!

Report

இந்தோனேசியாவில் லாம்பாக் தீவில் இன்று 5.5. ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது, இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக் பிராந்தியத்தில் அதிகாலை 1.02 மணிக்கு ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகப்பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவலும் வெளியாகவில்லை.

1067 total views