அரச படையினர் மீது கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் - வீடியோ இணைப்பு

Report

யேமன் அரச படையினரின் தளம் ஒன்றின் மீது ஹெளத்தி கிளர்ச்சிக்காரர்கள் மேற்கொண்ட டிரோன் தாக்குதலில் ஆறு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

யேமனின் லஹ்ஜ் பிராந்தியத்திலுள்ள அல் அனாட் தளத்தில் இராணுவஅணிவகுப்பினை பார்வையிட்டுக்கொண்டிருந்த முக்கிய தளபதிகளை இலக்குவைத்து இந்த டிரோன் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அணிவகுப்பு மரியாதையை முக்கிய பிரமுகர்கள் பார்வையிட்டுக்கொண்டிருந்த மேடைக்கு மேல் டிரோன்கள் வெடித்துச்சிதறியுள்ளன

கிளர்ச்சிக்காரர்களின் டிரோன் தாக்குதலில் இராணுவத்தின் பிரதிதளபதி மற்றும் பிராந்திய ஆளுநர் ஆகியோர் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

கிளர்ச்சிக்காரர்களின் தொலைக்காட்சி சேவை அரசபடையினரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது என குறிப்பி;ட்டுள்ளது.

மிக முக்கிய பிரமுகர்கள் காணப்பட்ட மேடையை நோக்கி டிரோன்கள் வருவதையும் தாக்குதலை மேற்கொள்வதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இது மிகப்பெரிய தாக்குதலாக காணப்பட்டது எங்களால் அழுத்தத்தை உணரமுடிந்தது என உள்ளுர் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

டிரோனில் வெடிபொருட்கள் நிரப்ப்பட்டிருந்தன என அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை கிளர்ச்சிக்காரர்கள் இந்த தாக்குதலிற்கு புதிய வகை டிரோன் பயன்படுத்தப்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.

வீடியோவை இங்கே அழுத்தி பார்க்கவும்

963 total views