சவுதிப் பெண்ணுக்கு அடைக்கலம் கோரி போராட்டம்

Report

சவுதி அரேபிய பெண்ணுக்கு அடைக்கலம் தரக்கோரி ஆஸ்திரேலியாவில் நான்கு பெண்கள் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.சவுதி அரேபியாவை சேர்ந்தவர் ரஹப் முகமது அல்கியூனன் 18. பெற்றோர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி, குவைத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்றார்.

அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் தாய்லாந்து அதிகாரிகள் அவரை தடுத்து, சவுதிஅரேபியாவுக்கு திருப்பி அனுப்ப முயன்றனர்.

அதற்கு மறுத்து ஆஸ்திரேலிய அரசு தனக்கு அடைக்கலம் தர வேண்டும் என பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரஹப் கோரிக்கை விடுத்தார்.

இவ்விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அவருக்கு அடைக்கலம் தரக்கோரி சிட்னியில் சவுதி அரேபிய துாதரகம் முன், 'சீக்ரட் சிஸ்டர் கூட்' அமைப்பை சேர்ந்த நான்கு பெண்கள் மேலாடை அணியாமல் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.

689 total views