வெனிசூலா அதிபராக மீண்டும் மடூரோ

Report

சர்வதேச நாடுகளின் விமர்சனத்தையும் மீறி, இரண்டாவது முறையாக வெனிசூலா அதிபராக, நிக்கோலஸ் மடூரோ பொறுப்பேற்றார்.

வெனிசூலாவில் கடந்த மே மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. முறைகேடு நடைபெறுவதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில், மடூரோ வெற்றி பெற்றார்.கராகஸ் நகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கியூபா, பொலிவியா உட்பட 94 நாடுகளில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கனடா மற்றும் சில தென் அமெரிக்க நாடுகள், அவர் இரண்டாவது முறை பதவியேற்பதை அங்கீகரிக்கவில்லை.

எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்று வெனிசூலா. அரசின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனத்தில் பெரிய அளவில் ஊழல் நடந்ததால், கச்சா எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. இதனால், பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது.

மடூரோவின் சர்வாதிகாரப் போக்கே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகளும், உலக நாடுகளும் விமர்சித்தன.

573 total views